வாரத்தின் இரண்டாம் நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், கடந்த வாரத்திலிருந்தே தங்கம் விலை கடும் உச்சம் கண்டு வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த வாரத்தின் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் (21.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.79.40க்கும், கிலோ ரூ.79,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வார தொடக்க நாளில் அதிகரித்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம்…

(20.11.2023) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,705க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி கிராமுக்கு ரூ.79.00க்கும், கிலோவுக்கு ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT