“பாக்சிங் டே டெஸ்ட்” என்றால் என்ன தெரியுமா ..? இதோ முழு விவரம்..!

ஏன் டிசம்பர் 26 அன்று பாக்சிங் டே தினம் கொண்டாடப்படுகிறது?

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயம் முன்பு ஒரு பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அந்த பாக்ஸில் தேவாலயத்துக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த  நன்கொடையை செலுத்துவார்கள். அந்த பெட்டியில் கிறிஸ்துமஸ் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள் அந்த பெட்டியை திறக்கும் நாளை தான் ‘பாக்சிங் டே’என அழைக்கப்படுகிறது.

டிசம்பர் 26-ம் தேதிஅன்று நடைபெறும் போட்டிகளை தான் ‘பாக்சிங் டே போட்டி’  என அழைக்கப்படுகிறது. பாக்சிங் டே முன்னிட்டு முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி 1980 முதல் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே தினத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இருப்பினும் கடந்த 1989 இல் மட்டும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்தது. அப்போது பாக்சிங் டே டெஸ்ட் நடைபெறவில்லை.

ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே போட்டி.. சாதனை படைக்கபோவது யார்..?

இன்றை தினத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை 1985ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியை மெல்போர்னில் ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. அப்போது கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்தியா விளையாடிய 17 பாக்சிங் டே டெஸ்ட் :

இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.  இந்திய அணி கடைசியாக 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பின்னர் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி பாக்சிங் டே டெஸ்ட்டில் மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் அதிகபட்சமாக 9 போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மதியம்1.30 மணிக்கு தொடங்குகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai