சாலை சரியாக இல்லையா.? டோல்கேட் கட்டணம் இல்லை.! மத்திய அமைச்சர் அதிரடி.!

டெல்லி: தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும்.
இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை பராமரிப்பு சரியாக இல்லை என்றால் அந்த பகுதி சுங்கச்சாவடியில் ஒப்பந்த நிறுவனமானது சுங்க கட்டணத்தை வசூல் செய்ய கூடாது என பேசினார்
மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தை செலுத்துகிறார்கள். சேதமடைந்த சாலைகள், சேறுகள் நிறைந்த சாலைகளில் சுங்க கட்டணம் வசூலித்தால் அது மக்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
இனி வரும் காலங்களில் Fastag முறையில் இருந்து மாற்றம் பெற்று GNSS முறை மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் சரக்கு அல்லது வாடகை வாகனங்களில் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் அனைத்து வாகன பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என கூறினார்.
அடுத்து, இந்த கட்டண முறைகள் ப்ரீபெய்டில் (முன்கட்டணம்) இருந்து போஸ்ட்பெய்டுக்கு (பயன்பாட்டுக்கு பின்) மாற்றப்படலாம். என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்தரங்கில் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025