ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல.! திருமா பரபரப்பு பேட்டி.!

VCK Leader Thirumavalavan - Bahujan Samaj Party State President Armstrong

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்ப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த கொலை வழக்கின் உண்மைத்தன்மை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னை அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள்ளது. ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்புக்கு ராகுல் காந்தி முதல் மு.கஸ்டாலின், இபிஎஸ், திருமாவளவன், அண்ணாமலை என பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேரில் தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு நன்றாக தெரியும். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர். ஆனால், சமூக விரோதிகள், ரவுடிகள் அவரைக் கொடூரமாகக் கொன்றனர். இதுபோன்ற கொடூரத் தாக்குதலை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாநில அரசு உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. எனவே தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இந்த கொடூர கொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரது உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே பகுஜன் சமாஜ் கட்சியினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war