வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.! 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள் தீவிர ஆலோசனை.!

A consultation was held at the Chennai Corporation office regarding North East Monsoon precautions

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்),  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என 4 மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் வெகுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருமழை, வெள்ளம் ஏற்பட்டால் அவை மழைநீர் வடிகால் வழியாக கடலுக்கு சென்றடைய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு என 7 அமைச்சர்களும், தயாநிதி மாறன் உள்ளிட்ட 3 திமுக எம்பிகளும், சென்னை மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த பகுதி எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளையும், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னை வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பேரிடர் மீட்புத்துறை மற்றும் சென்னை மெட்ரோ துறையினரும் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு போல பெருவெள்ளம் ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ,  மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு விவகாரங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies