கையை பிடித்த தாய்…கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்?

vijay and shobana chandrasekhar

சென்னை : த.வெ.க கட்சிக்கொடி அறிமுக விழாவில் தாய் ஷோபனா கையை பிடித்து கூப்பிட்டும் போது  விஜய் கண்டுகொள்ளாமல் சென்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபனா , கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தபிறகு கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்துவிட்டு மாநாடு நடைபெறும் மாநாட்டில் கட்சிக்கொடியில் இருக்கும் வரலாற்றை நான் சொல்லப்போகிறேன் என கூறி மாநாடு நடைபெறும் என்பதையும் உறுதி செய்திருந்தார்.

அப்போது உரையாற்றிய போது விஜய் தனது தாய், தந்தைக்கு நன்றி தெரிவிக்க மறந்தார். பின் வேகமாக மீண்டும் மேடைக்கு சென்று  “கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த எனது அப்பா அம்மாவிற்கு எனது நன்றிகள்” என இருவருக்கும் நன்றி கூறிவிட்டு கீழே இறங்கினார். இந்நிலையில், விழாவில் விஜய் செய்த விஷயம் ஒன்றும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அது என்னவென்றால், விழா முடிந்த பிறகு விஜய் அங்கு வந்த ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்து கொண்டு இருந்தார். அப்போது, அவருடைய தயார் ஷோபனா விஜயை பார்த்து அவருடைய கையை பிடித்து பேச முயன்றார். ஆனால், விஜய் அதனை கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தாயை மதிக்காமல் சென்ற விஜய் என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது போன்ற நெகடிவான விமர்சனம் இருந்தாலும், அந்த வீடீயோவை பார்க்கையில் அவ்விழாவிற்கு வருகை தந்த கூட்டத்தின் சத்தத்தினாலோ அல்லது மேற்கொண்டு விழாவை குறித்த பட்டடத்தினாலோ விஜய் அவரது அம்மா கையை தோட்ட போது அறியாமல் இருந்திருக்கலாம் என்பது போலவே இருக்கிறது.

விஜய், இதற்கு முன் பல விழா மேடைகளில் பேசும் பொழுது தனக்கு மிகவும் பிடித்தது அம்மா தான் என்பது பலமுறை கூறி இருக்கிறார். அதை விட அங்கு அத்தனை பேர் இருக்கையில் விஜய் வேண்டுமென்றே அவரது அம்மாவை கண்டுக்காமல் சென்றுள்ளார் என்பதற்கான சாத்தியம் மிக குறைவு தான். இதெல்லாம் விட விழாவில் அவரது பெற்றோரிடம் ஆசீர் பெற்றுருப்பார், மேலும் விழாவின் இறுதியில் பெற்றோருக்கு நன்றிகளும் தெரிவித்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir