உலக சூப்பர் கபடி லீக்கை அறிவித்தது 1X ஸ்போர்ட்ஸ்! எங்கு, எப்போது?

கபடியை உலக அளவில் கொண்டு செல்வதே இந்த WSKL தொடரின் ஒரு முக்கியமான இலக்காக இருக்கும் என என சாம்பவ் ஜெயின் கூறியிருக்கிறார்.

World Super League

சென்னை : தற்போது நடந்து முடிந்த உத்தரப்பிரதேச கபடி லீக்கை தொடர்ந்து அடுத்ததாக உலக கபடி சூப்பர் லீக் (World Super Kabaddi League – WSKL) தொடரானது தொடங்கவுள்ளது என விளையாட்டு மேலாண்மை நிறுவனமான 1X Sports அறிவித்துள்ளது. மேலும், இந்த தொடர் துபாய் மற்றும் தாய்லாந்தில் அடுத்தாண்டு நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொடரை ஆசிய மற்றும் தாய்லாந்து கபடி சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.

இந்த WKPL தொடரை நிறுவிய நிறுவனரான சாம்பவ் ஜெயின் கூறுகையில், “இந்தத் தொடரில் ஆசிய சூப்பர் ஸ்டார்ஸ், அமெரிக்கன் கனடியன்ஸ், ஆப்பிரிக்க பாந்தர்ஸ், அரேபியன் கிங்ஸ், ஐரோப்பிய ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஓசியானியா ராயல்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

மேலும், அந்த 8 அணிகளில் ஈரான், பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா உட்பட உலகெங்கிலும் உள்ள பல கபடி வீரர்கள் இந்த அணிகளில் விளையாடுவார்கள. மேலும், இந்த தொடருக்கான ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் குறைந்தது ஒரு வீரராவது இந்த லீக்கில் இடம் பெறுவார்கள். அதற்கான முயற்சியில் தான் இருந்து வருகிறோம்.

கபடியை உலக அளவில் கொண்டு செல்வதே இந்த WSKL தொடரின் ஒரு முக்கியமான இலக்காக இருக்கும்”, என சாம்பவ் ஜெயின் கூறியிருந்தார். மேலும், இந்த லீக் இந்தியாவின் புரோ கபடி லீக்கைப் போலவே நடத்தப்படும். இந்த தொடரை இப்படி நடத்துவதால் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கபடி விளையாட்டை பிரபலப்படுத்தும்.

நாட்டின் திரமையளர்களை வளர்ப்பது, பார்வையாளர்களை அதிகரிப்பது மற்றும் நிலையான விளையாட்டு சூழலை உருவாக்குவது என்பனவற்றை இலக்காக கொண்டு பயணிக்குள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்த லீக் அதன் இந்தியப் போட்டியைப் முதன்மையான விளையாட்டு நிகழ்வாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT