தவெகவின் 2ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு! விஜய் வாழ்த்து செய்தி…

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

tvk vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கடந்த 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, 2ஆம் கட்டமாக த.வெ.க.வின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனித்தனியே கட்சி நிர்வாகிகளை சந்தித்தபின், மாவட்ட செயலாளர் நியமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, 19 பேர் கொண்ட முதற்கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் விஜய் சான்றிதழ் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கினார்.

சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இசிஆர் சரவணன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக தாமு, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக அப்புனு, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக எம். சிவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்து தவெக தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில், “புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் அறிவுரை

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்,” நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு, நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது.

அனைவரும் சேர்ந்து பயணிப்போம்,நிச்சயம் 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதைவிட, இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai