Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் போப் ஆண்டவர் மறைவு வரை!

இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்கள் கீழே நேரலையில் வழங்கப்பட்டு வருகிறது.

live news update

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று, சட்டசபையில் இன்று, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

1 of 1
மணிகண்டன்

பகல்காம் தாக்குதல் :

  • காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் கேட்டறிந்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்த அமித்ஷா தற்போது ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.
  • மணிகண்டன்

    எல்லோருக்கும் நன்றி

  • பயிற்சி முதல் வெற்றி மேடை வரை ஆதரவளித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என அஜித்குமார் ரேஸிங் அணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    CSK வெற்றிபெரும்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் தங்கள் முழுத்திறனை வெளிகாட்ட்டி அணியை வெற்றிபெற செய்வார்கள் என அந்த அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
  • மணிகண்டன்

    புதிய போப்

  • புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 138 பேர் கொண்ட கார்டினல்கள் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் வாட்டிகனில் நடைபெறும் கான்கிளேவ் ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர்.
  • மணிகண்டன்

    UPSC தேர்வு முடிவுகள் :

  • UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
  • கெளதம்

    அதிமுகவினர் வெளிநடப்பு

  • பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • கெளதம்

    35 நிமிடங்கள் ஆலோசனை

  • சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 35 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
  • கெளதம்

    விமானத்தின் எஞ்ஜினில் தீப்பிடிப்பு

  • அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் பறக்க தயாராக இருந்த டெல்டா விமானத்தின் எஞ்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
  • மணிகண்டன்

    அடுத்த ஆஸ்கர் விருது விழா அப்டேட்!

  • 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஜன. 22ம் தேதி வெளியாகும். மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • மணிகண்டன்

    துக்கம் அனுசரிப்பு!

  • போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்