சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

குட் பேட் அக்லி திரைப்படம் வரும் மே மாதம் ஓடிடியில்வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

good bad ugly box off

சென்னை :  அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் அதற்கு அடுத்த வாரத்தில் கொஞ்சம் வரவேற்பு குறைந்தது. படம் குடும்ப ரசிகர்களை கவரும் அளவுக்கு இல்லாமல் ரசிகர்களுக்காகவும், இளைஞர்கள் கொண்டாடக்கூடிய வகையில் இருப்பதாலும் குறிப்பிட்டவர்கள் மட்டும் இன்னும் திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் படத்திற்கு கிடைக்கும் வசூல் இன்னும் குறையவில்லை என்று சொல்லலாம்.

ஏனென்றால், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் படம் 140 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 200 கோடி வசூலை ஏற்கனவே தாண்டிய நிலையில் தற்போதுவரை 220 கோடிகள் வசூல் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை என்றால் 250 கோடி ஆனால், படம் வசூல் செய்தது குறைவாக தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.  இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் ஓடினாள் அந்த தொகையை மீட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.

ஓடிடி அப்டேட் 

குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் நிலையில், இன்னும் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும், படம் வரும் மே 15 -ஆம் தேதிக்கு மேல் ஓடிடியில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்