பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!
செனாப் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சலால், பாக்லிஹார் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதலாக தொடர்கிறது. இந்த விரிசலின் தொடக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக கூறியது.
இதனால் சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதி குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் தண்ணீர் திறப்பு முழுதாக நிறுத்திவைக்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு மட்டும் ஒரு மதகு திறந்துவிட்டு மீதம் உள்ள மதகுகள் மூடப்பட்டன. நீர் தேக்கத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இப்படியான சூழலில், செனாப் நதி பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ராம்பன் மற்றும் ரியாசியில் பாயும் செனாப் நதி மீது கட்டப்பட்டுள்ள சலால் அணை மற்றும் பாக்லிஹார் அணைகளில் 5 மதகுகள் வழியாக திறந்துவிட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் சமதள பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025