மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கினாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்வி குறியாக மாறியுள்ளது.

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மே 8, 2025 அன்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல் ஒரு வாரத்திற்கு தடைபட்டது.
அடுத்ததாக மீண்டும் ஐபிஎல் போட்டி வரும் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இறுதிப் போட்டி ஜூன் 3, 2025 அன்று நடைபெறும். ஆனால்,ப்ரீத்தி ஜிண்டா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் அணிக்கு பிசிசிஐ ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அது என்னவென்றால், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் மே 24, 2025 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு என்ன பிரச்சனை? என்று நீங்கள் கேட்டால் பிளேஆஃப் வாய்ப்பு பாதிப்பு ஏற்ப்படும என்பது தான். ஏனென்றால், பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, குறைந்தபட்சம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் தேவை. ஆனால், தரம்சாலாவில் நடந்த போட்டி நிறுத்தப்பட்டதால், அந்த வாய்ப்பு தற்போது தள்ளிப்போயுள்ளது. அந்த போட்டி நிறுத்தப்பட்ட காரணத்தால் இரண்டு அணிகளுக்கும் சமமாக 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
அதைப்போல, வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தடைபட்டதால், பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் சில வீரர்கள் இந்தியாவில் இருந்தாலும், மற்ற முக்கிய வெளிநாட்டு வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைப்பது சவாலாக உள்ளது. இதுவும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டிகள் தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் இப்போது அவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. தரம்சாலா விமான நிலையம் மே 10 வரை மூடப்பட்டிருந்ததால், அணியினர் மற்றும் ஊழியர்கள் ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். இந்த இடமாற்றமும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது. பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, அவர்கள் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்