ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?
IPL 2025 பிளேஆஃப் தகுதி பெறுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சாதகமான நிலையில் உள்ளது.

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதற்கான எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் அதிகமாகவே எழுந்துள்ளது. அதிலும் பலருடைய பேவரைட் அணியாக இருக்கும் மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகமாக எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தற்போதைய நிலை
மே 16, 2025 நிலவரப்படி, மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் (6 வெற்றிகள், 6 தோல்விகள்) புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அவர்களின் நிகர ரன் ரேட் (Net Run Rate – NRR) +1.156 ஆக உள்ளது, இது லீக்கில் உள்ள மற்ற அணிகளை விட மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த சீசனில் இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மும்பை இந்தியன்ஸுக்கு மீதமுள்ளன. அந்த போட்டிகள் அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புகளை தீர்மானிக்கும்.
மும்பை விளையாடவுள்ள மீதமுள்ள போட்டிகள்
- மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் 26 மே
- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் 21 மே
பிளே ஆஃப் தகுதிக்கு எத்தனை புள்ளி?
பொதுவாகவே ஐபிஎல் லீக் கட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.பொதுவாக, 16 புள்ளிகள் (8 வெற்றிகள்) பிளேஆஃப் தகுதிக்கு பாதுகாப்பான எல்லையாகக் கருதப்படுகிறது, ஆனால் சில சந்தர்ப்பங்களில் 14 புள்ளிகளுடனும் (7 வெற்றிகள்) நல்ல நிகர ரன் ரேட் இருந்தால் தகுதி பெற முடியும்.
இந்த சீசனில், புள்ளிப்பட்டியல் மிகவும் போட்டியாக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தலா 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன, பஞ்சாப் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளிகள்) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (13 புள்ளிகள்) நான்காவது இடத்திற்கு நேரடியாக போட்டியிடுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (10 புள்ளிகள்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (11 புள்ளிகள்) எடுத்துள்ளனர்.
எனவே, போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்) வெற்றி பெற்றால், அவர்கள் 18 புள்ளிகளை எட்டுவார்கள்.18 புள்ளிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யும், மேலும் அவர்களின் சிறந்த நிகர ரன் ரேட் (+1.156) காரணமாக முதல் இரண்டு இடங்களுக்கு கூட வாய்ப்பு உள்ளது. இது அவர்களுக்கு குவாலிஃபயர் 1 இல் விளையாடி, இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறுவதற்கு அல்லது இரண்டாவது வாய்ப்பைப் பெறுவதற்கு உதவும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், அவர்கள் 16 புள்ளிகளை எட்டுவார்கள். 16 புள்ளிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியானதாக இருந்தாலும் கூட போட்டி மிகவும் நெருக்கடியாக இருக்கிறது.
ஏனென்றால், தற்போது 13 புள்ளிகளுடன் உள்ள டெல்லி, மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றால் 17 புள்ளிகளை எட்டும், இது மும்பை இந்தியன்ஸை வெளியே கூட அனுப்ப வாய்ப்பாக அமைந்துவிடும். ஆனால், டெல்லி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியடைந்தால், அவர்களின் வாய்ப்பு குறையும். எனவேம, முடிந்த அளவுக்கு மும்பை அணி இன்னும் விளையாடவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.