மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ''தக் லைஃப்'' படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இறுதியாக வெளியிடப்பட்டது

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் அதிரடி காட்சிகள் நிறைந்த அதன் பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை வைத்து பார்க்கையில், தனது அடுத்த வாரிசாக சிம்புவை அறிமுகப்படுத்துவது போல் முதலில் காட்சிகள் வருகிறது. பின்னர் அதுபகையாக உருவெடுப்பது அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் தெளிவாகிறது.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லரின் இறுதி 10 நொடிகள் மிரட்டலாக உள்ளது. மேலும் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் தோன்றுகிறார்கள், அதே நேரத்தில் அபிராமி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான இசையமைப்பு மற்றும் மணிரத்னத்தின் தனித்துவமான காட்சிகளின் தக் லைஃப் ஒரு திரை விருந்தாக இருக்கும் என்பதை உறுதியளிக்கிறது. கமலின் விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் அடுத்த பிளாக்பஸ்டர் படமாக இருக்கும்.