பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை கைது செய்யப்பட்ட ஆறு பேரில் பெண் யூடியூபர் ஒருவரும் அடங்குவார்.
கைது செய்யப்பட்ட இந்த அனைவரும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், எதிரிக்கு தகவல்களை வழங்கியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களில் கைதாலில் ஒருவர், பானிபட்டில் ஒருவர், நுஹ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டனர், ஹிசாரில் இருந்து ஒரு பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், நீதிமன்றம் அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. மல்ஹோத்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் 132,000 பின்தொடர்பவர்களும் உள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு அவர் மேற்கொண்ட பயணம் குறித்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டார்.
ஹரியானா காவல்துறையின் கூற்றுப்படி, ஜோதி மல்ஹோத்ரா மூன்று முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
View this post on Instagram
ஒரு தகவளின்படி, சிங் பஞ்சாபில் கல்லூரி மாணவராக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், அவர் பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் குருத்வாராவிற்கு யாத்திரை மேற்கொண்டார், அங்கு அவருக்கு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இந்தியா திரும்பியதிலிருந்து, அவர் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.