LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது.
இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டியுள்ளது. மறுபுறம் ஹைதராபாத் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது.
தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இப்பொது, லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய போகிறது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் மொத்தம் ஐந்து போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, லக்னோ அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி :
கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான அணியில், மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங் ரதி, வில்லியம் ஒரூர்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி :
கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் தகுதி பெற்ற நிலையில், மீதம் உள்ள ஒரு இடத்தை பிடிக்க மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இம்முறை பெங்களூரு அணி முதல் இரண்டு இடத்தில் நீடிக்குமா என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் வென்று பஞ்சாப் அணி 17 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.