டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் கேப்டன் என்ற போட்டியில் BCCI கில் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் ஜூனில் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக களமிறங்குகிறார்.
அவரது கேப்டன் பதவிக்காலம் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையில், அணியின் துணைத் தலைவராக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தது போல இந்த மாத தொடக்கத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம் :
இங்கிலாந்து தொடருக்கான அணியில் ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரீத் கிருஷ்ணா, மொஹம்மத் பும்ரா, மொஹம்மத் சிம்ராஜ், மொஹம்மத் பும்ரா சிங் மற்றும் குல்தீப் யாதவ்
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஜூன் 20 முதல் தொடங்கும். இது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடராகும். முதல் போட்டி ஜூன் 20 முதல் 24 வரை லீட்ஸில் நடைபெறும், இரண்டாவது போட்டி ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும். மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸில் மோதுகின்றன.
இந்தத் தொடரின் நான்காவது போட்டி ஜூலை 23 முதல் 27 வரை மான்செஸ்டரில் நடைபெறும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெற உள்ளது.