பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Bhavani river

கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சியில் 11.6 டிஎம்சி நீர் நிறைந்துள்ளது, அணையில் இருந்து 105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 16,140 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 26 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்