60ஆவது வயதில் 9ஆவது குழந்தைக்கு தந்தையான போரிஸ் ஜான்சன்!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரி தம்பதிக்கு 4வது குழந்தை பிறந்துள்ள நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரிட்டிஷ் : முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது 60ஆவது வயதில் ஒன்பதாவது முறையாக தந்தையானார். இவரது மனைவி கேரி ஜான்சன், மே 21, 2025 அன்று பிறந்த தங்கள் மகள் பாப்பி எலிசா ஜோசஃபின் ஜான்சனின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி அவர், “பாப்பி மிகவும் அழகாகவும் சிறியவளாகவும் இருக்கிறாள், நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
இந்தக் குழந்தை, போரிஸ் மற்றும் கேரி தம்பதியரின் நான்காவது குழந்தையாகும், மொத்தமாக போரிஸ் ஜான்சன் மூன்று திருமணங்களின் மூலம் ஒன்பது குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். ஏற்கனவே, அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் ஆறு குழந்தைகள் இருப்பதாக உறுதிப்படுத்தினார். இப்போது குழந்தையின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்திருக்கிறது.
எப்படி என்றால், அவரது முதல் திருமணம் அலெக்ரா மோஸ்டின்-ஓவனுடன் (1987-1993) நடைபெற்றது, ஆனால் இந்தத் திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதன்பிறகு,1993-ஆம் ஆண்டு மெரினா வீலருடா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போது லாரா, மிலோ, காசியா, மற்றும் தியோடர் என்ற நான்கு குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தனர்.
பிறகு, 2020-ஆம் ஆண்டு மெரினா வீலருடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். அடுத்ததாக, ஹெலன் மெக்இன்டயருடனான உறவில் ஸ்டெஃபனி என்ற குழந்தை 2009இல் பிறந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், கேரி ஜான்சன் என்பவரை 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வில்ஃப்ரெட், ரோமி, ஃப்ராங்க், மற்றும் இப்போது பிறந்த குழந்தையுடன் (பாப்பி எலிசா )வுடன் சேர்த்து நான்கு குழந்தைகள் உள்ளனர். மொத்தமாக 9-வது முறையாக தந்தையாகியுள்ள போரிஸ் ஜான்சனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025