ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள ”ராமாயணம்” படத்தின் முதல் லுக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ramayana First Look Teaser

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னி தியோல், காஜல் அகர்வால் ஆகியோரும் துணை வேடங்களில் நடிக்கின்றனர். சுமார் ரூ.835 கோடி செலவில் இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளார். இப்பொழுது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இறுதியாக வெளியிட்டுள்ளன.

இந்த காட்சிகள், உலகை ஆளும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் மூலங்களிலிருந்து தொடங்குகிறது. அற்புதமான அனிமேஷனுடன், இந்த காணொளி ராமாயணத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)

நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இணை தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தை, எட்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற VFX பவர்ஹவுஸான DNEG உடன் இணைந்து பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷனஸும் இணைந்து தயாரித்துள்ளன. பகுதி 1 2026 தீபாவளியின் போது உலகளாவிய வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது, இரண்டாம் பகுதி 2027 தீபாவளியில் வெளியிடப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்