கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டெஸ்லர் ராஜா சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Coimbatore Boom Blast

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர் ராஜா (வயது 48), 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், கோவை நகர காவல்துறையால் சத்தீஸ்கரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

1998 பிப்ரவரி 14 அன்று நடந்த இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராஜா, தையல் தொழிலாளியாகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் இருந்தவர், குண்டுவெடிப்புக்கு முன் வெடிகுண்டுகளை தயாரித்து அல்-உம்மா உறுப்பினர்களுக்கு விநியோகித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கோவையில் வள்ளல் நகரில் வாடகை வீடு எடுத்து வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் 1996-1997 காலகட்டத்தில் நாகூர், ரேஸ் கோர்ஸ் (கோவை), மற்றும் கரிமேடு (மதுரை) ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட மூன்று கொலை வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்.

26 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், கோவை நகர காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு, உளவுத்தகவல் அடிப்படையில் கர்நாடகாவில் இவரை கைது செய்து, புதன்கிழமை (ஜூலை 9, 2025) இரவு கோவைக்கு அழைத்து வந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்