”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை அச்சுறுத்துகிறது” – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது. இது ஓரணி vs டெல்லி அணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

mk stalin

சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கண்ணியத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு. அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி என நிலையான வளர்ச்சியில் சாம்பியன்கள் ஆனாலும், நமக்கு என்ன கிடைத்தது?

நமக்கு கிடைத்தது குறைவான இடங்கள், குறைவான நிதி, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு குரல் மட்டுமே. ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்ததால் அது டெல்லியை அச்சுறுத்துகிறது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் ஈபிஎஸ்-ம் அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள்.

நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும் நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், தமிழ்நாடு தலைவணங்காது. நாம் ஒன்றாக எழுகிறோம் – இது ஓரணி vs டெல்லி அனி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்