அரக்கோணம் அருகே கார் – டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.., 3 பேர் பலி.!

அரக்கோணம் அருகே டேங்கர் லாரி மற்றும் கார் மோதிய விபத்தில், காரில் இருந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car -lorry -accident

இராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே கார் மற்றும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இன்று, நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணித்த வெங்கடேசன் (55), அவரது மனைவி லதா, மற்றும் அவர்களது மகன் தினேஷ் (19) ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த உடனே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து குறித்து அரக்கோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்