‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?
வேகமாக வாகனம் ஓட்டியதற்காக ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது

லண்டன் : ‘ஹாரி பாட்டர்’ படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பெரிய சிக்கலில் வசமாக சிக்கியுள்ளார்.
அதாவது, கடந்த ஆண்டு 50கிமீ வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், Audi S3 காரில் 61 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறார் எம்மா வாட்சன். ஏற்கனவே அவரது ட்ரைவிங் ரெக்கார்டில் 9 அபராதப் புள்ளிகள் இருந்திருந்த நிலையில், இப்பொழுது, 4 புள்ளிகள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் குவிந்ததால், அவர் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் ஆனார்.
இந்நிலையில், 1,044 யூரோ (சுமார் ரூ.1.2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு வாகனம் இயக்கவும் இடைக்காலத் தடை விதித்து ஹை விக்கம்ப் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் வைகோம்பில் உள்ள உயர் வைகோம்ப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இந்த முடிவு வழங்கப்பட்டது.
பிபிசி அறிக்கையின்படி, ஜூலை 31, 2024 அன்று ஆக்ஸ்போர்டிற்குள் மணிக்கு 30 மைல் வேக மண்டலத்தில் எம்மா தனது நீல நிற ஆடி காரை மணிக்கு 38 மைல் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டார்.
இதற்காக, உயர் வைகோம்ப் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது அறிக்கையில், ஆறு மாத தடையைத் தவிர, எம்மா 1044 பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.1.2 லட்சம் அபராதத்தையும் செலுத்த வேண்டும். ஆனால், தடை குறித்து எம்மா வாட்சன் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!
July 17, 2025
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025