பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக.!

தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது போலப் பரப்பப்படும் செய்தி தவறானது என கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

Rajmohan tvk

சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி எது என்று அவர் பெயரை தெரிவிக்காததால், பல யூகங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சூசகமாக வெளிப்படுத்தினார்.

இதனால், அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என தமிழக அரசியல் களத்தில் பல யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை எங்களுடன் சேர்த்துக்கொள்ள மாட்டோம், தவெக தங்களுடன் கூட்டணி வைப்பதாக மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்று தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், “எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் எங்களோடு சேர்த்து கொள்ளமாட்டோம். தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனை கதையை சொல்லி வருகிறார்கள். செயற்குழு தீர்மானத்தின்படி முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான், விஜய் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான்.

மேலும், தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.

தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்