மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு. இவர் தனது மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் (24) தேனிலவுக்காக மேகாலயாவுக்கு சென்றபோது கொலை செய்யப்பட்டார். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள […]
டெல்லி : டெல்லியில் உள்ள சட்டவிரோத குடிசைப்பகுதிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதராசி முகாம் உட்பட பல இடங்களில் குடிசைப்பகுதிகள் இடிக்கப்பட்ட பிறகு, கோவிந்த்புரி பகுதியில் உள்ள கல்காஜியின் பூமிஹீன் முகாமில், அமைந்துள்ள குடிசைப்பகுதிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்ட பிறகு, புல்டோசர்கள் மூலம் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன. நேற்றைய தினம், ஜூன் 10 ஆம் தேதிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு டிடிஏ முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், குடியிருப்புக்களை […]
ஹரியானா : நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்பாடு தொடர்பாக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி 20°C-க்கு கீழ் குறைக்கவோ, 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது. […]
கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா மீதான மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) தொடர்பான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி மற்றும் நிலம் விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை […]
மேகாலயா : ராஜா ரகுவன்ஷி கொலையில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான ராஜ் குஷ்வாஹா, ராஜா ரகுவன்ஷியின் இறுதிச் சடங்கிற்கு வருகை தந்து மக்களை அழைத்துச் செல்லும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி தம்பதிக்கு கடந்த மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இருவரும் தேன் நிலவிற்காக மே […]
டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது. இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை […]
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன் புதிய மாடல், நாட்டின் கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உலகளவில் கடினமாக கருதப்படும் JEE ADVANCED தேர்வெழுதிய CHAT GPT 03. 360-க்கு 327 மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடத்தைப் பிடித்தது. ஆம், இந்த மதிப்பெண், JEE Advanced தேர்வில் All India Rank […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னை ஈசிஆரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம், நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்.10ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து ரூ.10,000 மதிப்புள்ள டிக்கெட்டை […]
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 9 நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று ஹனிமூனுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு பயணம் மேற்கொண்டனர். மே 22 அன்று அவர்கள் ஷில்லாங் நகரை அடைந்தனர். பின்னர், வாடகைக்குக் சைக்கில் எடுத்து கொண்டு வெளியே சுற்றி பார்க்க சென்றனர். ஆனால், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு இருவரும் […]
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10:30 மணியளவில் கப்பலின் தளத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 10 […]
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து குறைந்தது 5 பயணிகள் உயிரிழந்தனர். மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (CSMT) இடையே பயணித்த வேகமான புறநகர் ரயிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. கூட்ட நெரிசல் காரணமாக ரயிலின் கதவு அருகே நின்ற பயணிகள் தவறி தண்டவாளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் […]
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. சம்பவம் நடந்து நாட்கள் கடந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் தீராத சோகமாக இருந்து வருகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது மாநில அரசு. தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ‘சாதகமாக’ தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு (ஐ&பிஆர்) அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்தார். உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இம்முடிவு எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு […]
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று(ஜூன்.07) காலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார். அதாவது, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் முறைகேடு (Match Fixing) செய்து வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையில், ‘வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி போன்றவை ஜனநாயகத்தை […]
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் […]
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு உத்தரவு வரும் வரை KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து […]
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கதையை கேட்டால் தலையே சுத்திவிடும். அதுவும் ஆட்டோ ஓட்டாமலேயே, மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுகிறாராம். அட ஆமாங்க… மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5-8 லட்சம் சம்பாதிக்கிறார். அமெரிக்க தூதரகத்திற்கு வரும் விசா விண்ணப்பதாரர்கள், உள்ளே பைகளை கொண்டு செல்ல […]
காஷ்மீர் : உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து, கையில் தேசியகொடியை ஏந்தியவாரே பாலத்தில் நடந்துசென்றார். திறந்து வைத்த பின், 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்தப் பாலம் பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட உயரமானது, இதில் இயக்கப்பட காத்ரா -ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் […]
டெல்லி : இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முடிவுகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமான முடிவு ரெப்போ விகிதமாகும், இதில் ரிசர்வ் வங்கி அதை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, இது சந்தையின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு […]
கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட இன்னும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது. அதாவது, பிஎன்எஸ் பிரிவு 105, பிரிவு 25 (12), பிரிவு 142, பிரிவு 121 மற்றும் பிரிவு 190 […]