சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பிரத்யேக வேளாண் நிதிநிலை அறிக்கையை (வேளாண் பட்ஜெட்) மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் சற்றுமுன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பாக, அமைச்சர் ஆர். வினோத் நீண்ட நேரம் முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து கவிதை வடிவில் பேசத் தொடங்கினார்.
அப்போது, "கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய்" என்று குறிப்பிட்ட அவர், "இனி எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி... ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும், இல்லை உங்களை பற்றி பேசுவதாக மட்டும்தான் இருக்கும்" என முதலமைச்சரை வெகுவாகப் பாராட்டினார்.
அமைச்சரின் இந்தத் தொடக்க உரைக்குச் சட்டமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனைக் கவனித்த சபாநாயகர், அமைச்சரின் கவிதை மற்றும் புகழாரங்களை நிறுத்தச் செய்து, உடனடியாக நிதிநிலை அறிக்கையின் (வேளாண் பட்ஜெட்) வாசகங்களை மட்டும் வாசிக்குமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் பணியைத் தொடர்ந்தார்.