பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் […]
எனது முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்காவில் அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப் மற்றும் அவருடைய பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை […]
தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கூடாது எனக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என கேள்வி […]
உப்புமூட்டை விளையாட்டை விளையாடும் நாய்குட்டி மற்றும் கோழி. நாம் நமது சிறு வயதில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி இருப்போம். அந்த வகையில் உப்பு மூட்டை சுமக்கும் விளையாட்டானது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஒன்று. குழந்தைகள் அழும் பட்சத்தில், அவர்களது அழுகையை மாற்றுவதற்காக, பெற்றோர் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவதுண்டு. இதனால், குழந்தைகளின் அழுகை மாறுவதோடு, மகிழ்ச்சியும் அடைவதுண்டு. ட்வீட்டரில் வெளியான இந்த வீடியோ, தற்போது இணையத்தில் […]
7 பேர் விடுதலை குறித்து மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரியின் அதிரடி பேச்சு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும், பொதுமக்களும் விடுதலை செய்யுமாறு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மனிதநேய கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும், […]
சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்த காவல் ஆணையர். பொதுவாக குற்றங்கள் நடக்கும் போதோ அல்லது புகார் சம்பந்தமான மற்ற காரியங்களுக்கோ, நாம் புகாரளிக்க காவல்நிலையத்தை நாடுவதுண்டு. அதனை எளிதாக்கும் வகையில், சென்னையில், போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தொடக்கி வைத்தார்.
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அணைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நவ.2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் தன மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள், முககவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், […]
மு.க.ஸ்டாலின் குறித்து இகழ்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து வசைபாடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழ்ந்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பில்லாத தில்லுமுல்லு பேர்வழிகளால் சிலசுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒருபக்கம் எடப்பாடியை புகழும் வாசகங்கள், இன்னொரு பக்கம் என்னை இகழ்ந்தும் வாசகங்கள். என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் […]
தமிழ்நாட்டுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. பண்டிகை காலங்கள் என்றாலே, நாம் வெடி இல்லாமல் கொண்டாடுவதில்லை. இந்த வெடியால் பல தீமைகள் ஏற்படும் என்றாலும், வெடி இல்லாத ஒரு பண்டிகையை, நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு பண்டிகை நாட்களின் போதும், இந்த வெடியால் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. இருந்தாலும், ஆவாரை நாம் தவிர்ப்பதற்கு நம் மனது தயங்க தான் செய்கிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் […]
டாடா குழும அறக்கட்டளை சார்பில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி நன்கொடை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, டாடா குழும தேர்தல் அறக்கட்டளை சார்பில், ரூ.46.78 கோடி நண்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இது தனி நபரால் அல்லது குழுமத்தால் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில், கிட்டத்தட்ட 90% ஆகும். இதுமட்டுமல்லாமல், அதிமுகவுக்கு ஐடிசி நிறுவனமும் 2019-2020-ல், தேர்தல் நன்கொடையாக ரூ.5.39 கோடியை, இரண்டு தனி காசோலைகளாக வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிமுக […]
பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி […]
எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை. சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில், 2006 முதல் 2009 வரை துணைவேந்தராக பணியாற்றியவர் முர் முஸ்தபா உசைன். இவர் பணியில் இருந்த போது, 2008ம் ஆண்டு மே மதம், பிரிட்டிஷில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. பின் இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, சாதாரண இருக்கையாக […]
துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை. துருக்கியில், ஏகன் தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. இதனால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை. இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், […]
தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, மநுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து தவறாக இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், பாஜகவினர் இதற்க்கு எதிராக போராட்டத்தில் குத்தித்தனர். இந்நிலையில், இதுகுறித்து, எம்.பி.ரவிக்குமார் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘மனுஸ்மிருதியை பெண்கள் படிக்க நேர்ந்தால், தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 10 நாளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தில் தான் உலாவி வருகின்றனர். இது தான் அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளது. அந்த வகையில், இன்று பலரும் ஆன்லைனில் விளையாட்டுகளில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். முதலில் பொழுதுபோக்குக்காக தொடங்கப்படும் இந்த விளையாட்டானது, நாளடைவில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர். இதற்காக தங்களது பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், மன உளைச்சலில் […]
சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. […]
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது. துருக்கியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணபடுகிறது. அங்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெதுமெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிற நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களின் கேள்விக்கு பதிலாக, வரும் 16-ம் தேதி […]