அம்பானி தன் சொந்த செவிலேயே வாங்கியதா இது..?அப்படி என்ன விசேஷம் அதுல இருக்கு.?

ரிலையன்ஸ் நிறுவனத்தின்  முகேஷ் அம்பானி பற்றி நமக்கு தெரியும். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு அவரது மொத்த சொத்துக்களின் இந்திய மதிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின்  முகேஷ் அம்பானி பற்றி நமக்கு தெரியும். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு அவரது மொத்த சொத்துக்களின் இந்திய மதிப்பு படி 47 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.

unknown node

அவரிடம் பிஎம்டபிள்யூ 760 எல்ஐ செக்யூரிட்டி, மற்றம் மெர்சிடியஸ் பென்ஸ் எஸ் கார்டு ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த இரண்டு காரும் வாங்கிய பின்பு சிறிது கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இந்த ஒவ்வொரு காரும் சுமார் ரூ 15 கோடி மதிப்பாகும்.

இந்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது முகேஷ் அம்பானிக்கு. இந்நிலையில் அவர் தற்போது தனது பாதுகாவர்களுக்காக இரண்டு பைக்குகளை வாங்கியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கியுள்ள அவர் அதில் மாடிபிகேஷன் செய்ய வழங்கியுள்ளார். மாடிபிகேஷன் செய்யும் இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இனணயதளத்தில் வெளியானது.

unknown node

இந்த பைக் முழுவதும் போலீஸ் பைக் போன்று மாற்றப்பட்டுள்ளது. முன் பக்கம் பெரிய விண்ட் சீல்டு, இரண்டு பக்கமும் பெட்டிகள், பின் பக்கம் வயர்லெஸ் இணைப்பிற்கான வசதி, பைக் முழுவதும் வெள்ளை கலர் பெயிண்ட், முன் பக்கத்திலும் பக்கவாட்டிலும் ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள், போலீஸ் வாகனத்திற்கு என ஸ்பெஷலாக பொறுத்தப்படும் லைட்டுகள் என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

unknown node
இந்த வாகனத்தை அம்பானி அவர் சொந்த செவிலேயே வாங்கி தனது பாதுகாவலர்களுக்கு வழங்குகிறார்.