இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும்தங்கள் படைகளை தயார் படுத்தும் முனைப்பில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ராணுவத்தை […]
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நானே போபாக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், போப்பாண்டவர் உடையில் தலை முதல் கால் வரை அணிந்திருக்கும் AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. View this post on Instagram A post shared by President Donald J. Trump (@realdonaldtrump) […]
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது அதிகரித்து உள்ளது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உள்ளது என்ற குற்றசாட்டை இந்தியா முன்வைத்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் வான்வழியை பயன்படுத்த எதிரெதிர் நாடுகளுக்கு தடை விதித்துள்ளன. அதேபோல தூதரக உறவுகள், வணிகள் உறவுகள், விசா ஆகியவை […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன் வரிசையில், சிந்து நதியின் நீர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்வது உட்பட இப்படி இந்தியா கடினமான முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு முடிந்தவுடனேவாக்கு எண்ணிக்கையும் உடனடியாக தொடங்கிவிடும். 343-ல் 172 தொகுதிகளை வென்று இருந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றலாம். கனடாவில் 2015 முதலே லிபரல் கட்சி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த 2024 டிசம்பரில் அப்போதைய பிரதமர் ட்ரூடோராஜினாமா செய்ய, அதன் பிறகு லிபரல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்க் […]
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District) ஒரு உணவகமான சுனியாங் உணவகத்தில் (Chuniang Restaurant) மதியம் 12:25 மணிக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தீ மிக வேகமாகப் பரவியதால், உணவகத்தில் இருந்தவர்களால் தப்பிக்க முடியவில்லை. மேலும், தீ பிடித்த இந்த […]
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தொய்பயன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக இந்திய அதிகாரிகள் […]
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது பெரும் கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டாம் உலகப் போரின் வெற்றி ஆண்டு நினைவை முன்னிட்டு மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அதன்படி, வரும் மே மாதம் 9-ஆம் தேதி கொண்டாடப்படும் வெற்றி தினத்தை மையமாகக் கொண்டு, மே 8 முதல் 10 வரை போர் […]
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ எட்டியுள்ளது. மேலும், அந்நாட்டு அரசாங்கம் ஒரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது என்று ஈரானின் ஐஆர்ஐபி செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 197 பேர்ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹோர்மோஸ்கானின் ஆளுநர் கூறியுள்ளார். பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் யார்டில் […]
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குவோம் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். ராவல்பிண்டியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹனிஃப் அப்பாசி, ”பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், தகுந்த பதிலடி கொடுப்போம். பாகிஸ்தான் ரயில்வே எப்போதும் ராணுவத்திற்கு உதவ தயாராக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் இந்த […]
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் தொடங்கியது. அவரது உடல் அவர் விருப்பப்படி எளிய மரப் பெட்டியில் வைக்கப்பட்டு, புனித மரியா மஜியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இது 1903-க்கு பிறகு வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஆவார். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் […]
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து சுற்றுவட்டார பரந்த நிலப்பரப்பு வரையில் அதிர்வு இருந்தது. ஈரான், அமெரிக்காவுடன் 3வது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மீட்புப்படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற […]
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த TRF அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்றும், இதனால் பாகிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் வர்த்தகம், விசா, எல்லை பங்கீடு என இரு நாடு உறவுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறி […]
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத கும்பலுக்கு உதவி செய்வது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு என்றும், இதற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு என்றும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தகம், தூதரகம், நதிநீர் பங்கீடு, விசா என […]
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது மட்டும் இல்லாமல், விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுத்தது. கூடுதலாக பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த சூழலில் இன்றைய […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையான தொடர் ‘தடை’ நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தடை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் செயல்பட்டு வரும் TRF தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு என்ற குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் […]
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று ரோமில் உள்ள புனித மரிய மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் யார் என்ற கேள்வியும், அவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் முறை, கான்கிளேவ் எனப்படும் ரகசிய மாநாட்டின் […]