காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க குடிமக்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில், காசாவில் 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்தது. […]
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார் பலூச், பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் எக்ஸ் தள பதிவில் பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை எனக் குறிப்பிட்டு, இனியும் உலகம் இந்த விவாகரத்தில் அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பலுசிஸ்தானின் முக்கிய தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த […]
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. இருப்பினும் நீங்கள் தொடங்கினாள் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. இந்த சூழலில், இன்று, ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் […]
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து […]
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு தங்கள் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியதாக இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் சனிக்கிழமை முதல் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இது தொடர்பாக, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மட்டுமல்லாமல், […]
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதற்றமான சூழலில் நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா மாற்றம் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதனை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் […]
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர் 2″ போன்ற இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இரு நாடுகளிடையேயான எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து நான்கு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த தாக்குதல்களை நிறுத்த […]
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா மாற்றம் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதனை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். pic.twitter.com/lRPhZpugBV — Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025 இதையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். இருநாட்டு […]
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், சாதூர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், ”அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதலாக தொடர்கிறது. இந்த விரிசலின் தொடக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக கூறியது. இதனால் சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதி குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் தண்ணீர் திறப்பு முழுதாக நிறுத்திவைக்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு மட்டும் ஒரு மதகு திறந்துவிட்டு மீதம் உள்ள […]
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரேடார் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) எனும் கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. நீண்ட வருடங்களாக பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரயில் கடத்தல், பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் என தாக்குதல் நடத்தி வந்த BLA அமைப்பு நேற்று நடத்திய 2 தாக்குதல்களில் […]
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலானது காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், பாகிஸ்தான் ராணுவம் […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70 முதல் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதிலும், பஹாவல்பூரில் நடந்த […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த ஏப்ரல் 29 அன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், தாக்குதலுக்கு எப்படி, எப்போது, எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு “முழு சுதந்திரம்” இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், க பாகிஸ்தான் இன்று மீண்டும் ஏவுகணை […]
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 14மணி நேரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னதாக, அக்டோபர் 2019 இல், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய 7 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பின் […]
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” […]
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத அமைப்பான TRF எனும் அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது என்றும், இது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இயக்கம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகியுள்ள நிலையில், தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை இந்தியா, பாகிஸ்தான் இணைந்து கண்டறிய வேண்டும் […]