தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை கண்டு வந்த நிலையில், ஆபரணத் தங்கம் சென்னையில் இதுவரை இல்லாத விலையேற்றம்
கண்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.65 விலை உயர்ந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது.
மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து377.80க்கு விற்பனை. சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரணத் தங்கம்விலையேற்றம் கண்டுள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.