சென்னை :கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதிலும் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஜெட் வேகத்தில் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றயை தினம் (12-11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கும் விற்பனையாகிறது. அக். 31ம் தேதி வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்கப்பட்டது. அதன்பின், கடந்த நவ.1 முதல் படிப்படியாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
unknown nodeGOld News Card
அதன்படி, கடந்த 12 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,960 குறைந்துள்ளது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ₹100க்கும், கிலோ வெள்ளி ரூ.1200 குறைந்து ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,590க்கும், சவரனுக்கு ரூ. 60,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
