#Breaking:வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103 குறைவு!

In Chennai today, the price of a cylinder for commercial use has dropped by Rs 103.50 to Rs 2,131.

சென்னை:இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்து ரூ.2,131-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியும் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  ரூ.101.50 அதிகரித்து ரூ.2,234 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம்,19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ரூ.770 உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,ஜனவரி 1 ஆம் தேதியான இன்று சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்து ரூ.2,131-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால்,வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.915.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது, ஓட்டல்கள் மட்டும் அல்லது டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.