இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

On the 54th day, the price of a liter of petrol remained unchanged at Rs 101.40 and a liter of diesel at Rs 91.43.

சென்னை:54-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இதற்கிடையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது.இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது. இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில்,54-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை  மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.