#Rupee:ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.

பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.

பெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்தியது. இதனால் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது.  இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று  இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

நாணயம் அதன் முந்தைய நாள் முடிவில் 80.28 ஆக இருந்ததை விட 0.4% குறைவாக திறக்கப்பட்டது. இதற்கு முன், ஆக., 29ல் 80.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டியது.