பங்குச்சந்தை வீழ்ச்சி..! சென்செக்ஸ் 326 புள்ளிகள் சரிந்தது..!

இன்றைய வர்த்தக நாளில் 59,346 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 326 புள்ளிகள் அல்லது 0.55% என

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 326 புள்ளிகள் குறைந்து 58,962  ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,303 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,346 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 326 புள்ளிகள் அல்லது 0.55% என குறைந்து 58,962 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 88.75 புள்ளிகள் அல்லது 0.51% குறைந்து 17,303 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

சிப்லா லிமிடெட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், யுபிஎல் லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.