பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 671 புள்ளிகள் குறைந்தது..!

இன்றைய வர்த்தக நாளில் 59,259 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 671 புள்ளிகள் அல்லது 1.12% என

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 671 புள்ளிகள் குறைந்து 59,135 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,412 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,259 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 671 புள்ளிகள் அல்லது 1.12% என குறைந்து 59,135 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 176.70 புள்ளிகள் அல்லது 1.00% குறைந்து 17,412 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

டாடா மோட்டார்ஸ் லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, என்டிபிசி லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டைட்டன் நிறுவனம், ஐடிசி லிமிடெட், டெக் மஹிந்திரா ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

டாடா மோட்டார்ஸ், என்டிபிசி லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டாக். ரெட்டிஸ் லேபரட்டரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ  ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஹவுசிங் டெவலப்மென்ட், ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.