பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் அதிகரித்து 61,275 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,015 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,990 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் அல்லது 0.40% என அதிகரித்து 61,275 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 86 புள்ளிகள் அல்லது 0.48% அதிகரித்து 18,015 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, நெஸ்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், லார்சன் அண்ட் டூப்ரோ, ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், இண்டஸ்இண்ட் வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.