பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 60,676 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,840 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 60,676 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,840 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 220 புள்ளிகள் அல்லது 0.65% என அதிகரித்து 60,676 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 17,840 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,286 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,721 ஆகவும் நிறைவடைந்தது.

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்துள்ளது. மேலும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், என்டிபிசி லிமிடெட், டாடா ஸ்டீல் லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

என்எஸ்இ நிஃப்டியில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிண்டால்கோ மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளது.மேலும் பார்தி ஏர்டெல், ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.