பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 97 புள்ளிகள் குறைந்து 59,567 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,618 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக சரிவில் வர்த்தககமாகி வந்த பங்குச்சந்தை வாரத்தின் 3-வது நாளான இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 59,745 புள்ளிகள் என சரிவில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 159.21 புள்ளிகள் அல்லது 0.27% என சரிந்து 59,567 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 41.40 புள்ளிகள் அல்லது 0.23% சரிந்து 17,618 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,727 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,706 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், எச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எச்சிஎல் டெக்னாலஜிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட், விப்ரோ லிமிடெட், என்டிபிசி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.