கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பால் , அதனை சுவாசித்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த மின்கசிவு விபத்தால் வெஸ்ட் ஹில்லில் வசிக்கும் கோபாலன், கோயிலாண்டியைச் […]
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் உள்ள ஷிர்காவோவில் நடந்த ஸ்ரீ லைராய் ஜத்ரா திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் […]
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாட்டு எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்திய எல்லைக்குகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதாகவும் […]
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்பொது, காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கூட்ட நெரிசலுக்கான காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலையில் நடந்தது, கோயிலில் பல நூற்றாண்டுகள் […]
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது இதில் கலந்து கொண்ட யூ-டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை தெரிவித்தார். மோகன் நீல் பேசுகையில், இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுபுது வீடியோக்கள் வெளிநாட்டவரை […]
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இந்திய விமானப்படையும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. அதில், உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் […]
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள முதல்வர் பினராயிவிஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த துறைமுகத்தால், சர்வதேச வர்த்தகம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அட்டாரி எல்லையின் வாயிலை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடியுள்ளது. இதன் காரணமாக பல பாகிஸ்தான் குடிமக்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதற்கு மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, 786 […]
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல் விவகாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுமாறு ஹிமான்ஷி நர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில், முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி […]
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று. இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது. இப்படியான […]
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் இது […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், இத்தாக்குதலை அடுத்து வெளியூரில், வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு இன்று […]
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி இன்று (மே 1) அமலுக்கு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என இரண்டிற்கும் வரி விதிக்கப்படுகிறது. மேலும், இதில் அரை […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லை அருகே இருபப்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை பகுதி மூடியதால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் […]
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக எல்பிஜி சிலிண்டரின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாறும், அதன் தகவல்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகாலையில் புதுப்பிக்கப்படும். அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்ததாக நடத்தப்படும் போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை […]
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றினர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிம்மாச்சலத்தில் நேற்று பெய்த கனமழையால் இந்த விபத்து […]
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு […]
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ(Para SF) என NIA தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் […]