ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டமைப்பை அண்மையில் உருவாக்கியது. இக்கூட்ட அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.அதே போல் துணைத்தலைவராக மெகபூபா முப்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய பரூக் அப்துல்லா குப்கர் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது அல்ல.அது பாஜகவுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதே இக்கூட்டமைப்பின் நோக்கம் […]
இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 70-வது முறையாக உரையாற்றுகிறார். இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. 70வது முறையாக இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார். நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலமும் உடன் வருவதால் மக்கள் […]
அமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள் முடிவடைந்தது. தேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே […]
சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். குஜராத் மாநிலத்தில் வேளாண்மை, மருத்துவம், சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு […]
இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா அளித்து வரும் பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா- சீனா இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி, இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும். எல்லை பிரச்னை மட்டுமின்றி இந்தியாவுடன் […]
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. இதனிடையே பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் விவாதமாக […]
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் […]
உண்மையைத் திரிக்கும் சனாதனிகளையும், துணைபோகும் ஆட்சியாளர்களையும் எச்சரித்துள்ள வைகோவிற்கு நன்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார் – வைகோ திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மேலும், அவர் கூறுகையில் ,மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே […]
திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று வைகோ தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 […]
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொல்.திருமாவளவன் பேசியது குறித்து சமூக […]
“அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநரின் அனுமதி பெற்று – தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதற்கு எதிராக, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் , மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு […]
தமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார். தமிழ்க மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல் , செல்வம், கல்வி இன்றியமையாதது.சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் மக்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று சீரோடும் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். நாளை ஆயுதபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் வசனப்பேச்சு சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கமல் ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்ட பக்கத்தில் “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார். இவர், […]
முதல்வர் பழனிச்சாமி அக்.,28ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகள் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு […]
கடற்படையை சேர்ந்த விமானம் விபத்துள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அலபாமா என்கிற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற வகைச் சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளகியுள்ளது. விபத்தில் விமானத்தை ஒட்டிய 2 விமானிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கடற்படையை சேர்ந்த விமானம் விபத்து உள்ளாகியதால் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தியுள்ளார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் உகுந்த நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று விஜயின் தந்தை சந்திர சேகர் அன்மையில் பரபரப்பு தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு,மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக […]
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மெஹபூபா கருத்து. பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர்கள் என கண்டனம். சமீபத்தில். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் நிருபர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னால் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஐ மீண்டும் அமல்படுத்தி காஷ்மீரின் கொடி பறக்க விடும் போதுதான் இந்திய தேசிய கொடியையும் இங்கு பறக்க விட முடியும் கூறினார். இந்த அவரது கருத்து அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்நிலை இவரது இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பட்டாசு ஆலையில்ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விருதுநகர் மாவட்டம் செங்குளம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் […]