சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அவர் “காலையில் இலந்தை பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுங்கள் என்றால், ராமதாஸ் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து […]
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்திருந்தார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து ஜூன் 27, 2025 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர், சௌமியா தேர்தலில் நிற்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும், தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மீறி இது நடந்ததாகவும் கூறினார். இது குறித்து பேசிய அவர் “அன்புமணியும் சௌமியாவும் என்னிடம் கெஞ்சி தர்மபுரியில் போட்டியிட […]
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம், ஒரு காதல் திருமணம் தொடர்பாக எழுந்த மோதலில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜூன் 15, 2025 அன்று, பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 35 ஆதரவாளர்கள் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் […]
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்குவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுதும் பருவமழை துவங்கிவிடும். வடக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதக சூழல் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று (27/06/2025) […]
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக போய்க்கொண்டு இருந்தது. இப்படியான சூழலில் திடீரென அர்ஜுனன் தன்னுடைய மகள் அபிதாவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலே அபிதா துடி துடித்து உயிரிழந்த நிலையில், மகளை கொன்றுவிட்டு அர்ஜுனன் தலைமறைவானார். பிறகு இது குறித்து […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டப்படும். இது குறித்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர் “கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை, தமிழ்நாட்டு […]
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் (ஜூன் 27) இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இன்னுமே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது? இது மரியாதை […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து அந்த தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வந்தனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி மோனிகா தேவி மூத்த மகள் ரோஷினி (வயது 7) உடன் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர். […]
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு முறையே 2 பைசா, 1 பைசா உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. அதன்படி, ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஜூலை 1-ல் வெளியாகும் என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். சென்னை ICF-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், அம்ரித் பாரத் பணிகளை ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா ஆய்வு செய்தார். அப்போது […]
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கூமாபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும், இது சமீபத்தில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞரின் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமடைந்தது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட ஆர்வத்துடன் சென்றனர். ஆனால், கூமாபட்டி எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாத் தலமாக வசதிகள் இல்லாத இடமாக இருந்ததால், பலர் […]
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் […]
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை http://tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதன்படி, மொத்தம் 145 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி […]
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக இபிஎஸ் வருவார், அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று அதிமுக திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் அமித்ஷாவோ, இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கூறாமல், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார். இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘ NDA கூட்டணியை பொறுத்தவரையில் […]
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதல் ஒன்றிக்கு பேட்டியளித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? […]
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். மாநில செயற்குழு என்பது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ‘கூமாபட்டி’ கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. ‘இந்த பக்கம் பார்த்தா அமேசான் காடு மாதிரி இருக்கும் அந்த பக்கம் பார்த்தா அந்தமான் மாதிரி இருக்கும்’ என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட நிலையில், பலரும் கூகுள் மேப்பில் கூமாபட்டியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பலரும் அந்த இடத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் டிரெண்டாவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற […]
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும் அதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இப்போது அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என மிகவும் காட்டத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய […]
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாடு நன்றாக […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், தினமும் ஆட்டிறைச்சி விலையை நிர்ணயித்து அறிவிக்கும் வகையில் ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சி, மாநிலம் முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் ஒரே மாதிரியான தன்மையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான விலை நிர்ணயத்தை வழங்கும். இந்த அறிவிப்பு, ஜூன் 26, […]