சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் […]
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் இன்று, சென்னை இசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் […]
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் அதிகாலை முதலே தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட கணபதி கோயிலில் சித்திரை முதல் நாளில் மட்டும் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். இதனைக் காண அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மணிமூர்த்தீஸ்வரம் குவிந்துள்ளனர். […]
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்த தனது ஆதரவாளர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைபட்டால், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின . தன்னை கோவை […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார். […]
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் செய்தியாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்க்ள் என கேட்டபோது, “நீங்கள் ஒரு கட்சி ஆரம்பியுங்கள் நான் கூட்டணி வைக்கிறேன்” என கலகலப்பாக […]
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்திருந்த சூழலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரும், […]
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசியக் குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று தேசிய தலைமையுடன் முக்கிய ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்மார்ட் போன், கணினி, செல்போன் கணினி உதிரி பாக்கங்கள், செமி கண்டெக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு பொருட்களுக்கு அமெரிக்கா புதியதாக விதித்துள்ள பரஸ்பர விதி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர், பல்வேறு கிறிஸ்தவ மத போதக நிகழ்ச்சிகளை “கிங் ஜெனரேஷன்” எனும் பெயரில் நடத்தி வந்துள்ளார். கடந்த வருடம் (2024) மே மாதம் நடைபெற்ற ஒரு மத போதக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது , ஜான் ஜெபராஜ் , அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு […]
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார். அது என்னவென்றால் ” கட்சியின் நிறுவனர் எனும் பொறுப்பில் இருக்கும் நானே, கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் செயல்படுவார். அடுத்தடுத்த முடிவுகள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.” என […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது.அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் பேசப்பட்டாலும், பாஜக தேசிய தலைமை தலைவரை ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டதால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று அதே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதனை அறிவித்தார். இதனையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக கட்சிக்கு உள்ளேயும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பையும் வெளியீட்டு இருந்தார். அதில், திமுக கட்சியில் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணியை திமுக, விசிக, தவெக என பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணிகட்ட ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலே ஆலோசிக்கவில்லை, நாங்களும் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், இப்போது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அதன்படி, 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நேற்றைய தினம் பாஜக தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு’ இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்’ ஒன்றரை ஆண்டுகளாக […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழகத்தையும் அடகு வைக்க துடிக்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை […]
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் போலீஸார் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்பொது அந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகளை அடுத்து நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார். அதனை தொடர்ந்து இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக […]