TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை […]
Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. […]
Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு […]
Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர். அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் […]
MK Stalin: கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலாவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், மத்திய பாஜக அரசை விமர்சித்தும் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் […]
Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, […]
TN Rain: தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல். கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் […]
Election2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் பாஜக […]
AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார். பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு […]
Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை […]
Annamalai: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு. மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சுழலில் தனது செல்போனை தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுக்கேட்பதாக பகிரங்கமான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் […]
MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது […]
PMK: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க இதுவரை வழங்கப்பட்ட […]
PM Modi: சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய பிரதான கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் […]
Annamalai: இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஆ.ராசா என்று அண்ணாமலை விமர்சனம். கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உறையற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பிறக்காத தமிழன் தான் பிரதமர் மோடி. ஜனநாயகத்தை பற்றி திமுக […]
MK Stalin: கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி, சில கேரண்டிகளை தருவாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி. தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தேர்தலை முன்னிட்டு, பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து […]
Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் […]
VCK: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய யுத்தியை கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பார்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், […]
ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 97) முதுமை காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி […]
Election2024: மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]