இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், பல தலைவர்கள் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-க்கு எதிர்ப்பு […]
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழப்பு. இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.63 […]
சென்னையில், இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 78,940 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,744 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ நெருங்கவுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 […]
இன்று தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,13,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,471 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,56,526பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,06,737 லிருந்து 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு வந்தாலும் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் இதுவரை 1,56,526 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 85 பேர் கொரோனா […]
சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையின் படி, தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாகத் தவறுகளாலும் கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது பெரிய அளவில் பரவியுள்ள நிலையில் இலட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அடுத்தவர் மீது பழி போட்டுத் தப்பிப்பது அக்கறையற்ற அணுகுமுறை தவறான செயல்பாடுகள் என ஒவ்வொரு […]
தென்காசி அருகே வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் […]
தமிழ்நாடு அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி நான்காண்டு இளங்கலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக Govt College of Architecture and Sculptureபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு […]
திறந்தவெளியில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் சட்டப்பேரவை 3 நாட்கள் மூடல். மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த நிலையில் காவலருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தற்போது காவலருக்கு தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் புதன்கிழமை வரை மூடப்பட்டது. ஏற்கனவே நேற்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், சபை காவலர்கள், ஊழியர்களுக்கு […]
வெப்ப சலனம் காரணமாக7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களான […]
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அந்த பகுதி நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இம்மாத இறுதிவரையுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. […]
தமிழகத்தில் நாளை முதல் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். […]
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துப் வரும் […]
எளிமையான முறையில் நடைபெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண நிச்சயதார்த்தம். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பாண்டிச்சேரியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம்நடைபெற்றது. நிச்சயதார்த்தில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர். அடுத்த 3 மாதங்களில் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கோவிலின் 438-வது திருவிழா, ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சில […]
வருகின்ற 29-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் . தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வருகின்ற 29-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் . மேலும், தமிழகத்தில் ஊரடங்கு வரும் […]
கொரோனாவுக்கு ஒன்றிரண்டு தெரியாததற்கு நான் என்ன செய்யமுடியும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பத்தேநாளில் கொரோனா குறையும் என தமிழக முதல்வர் கிளப்பிவிட்டு இன்றோடு 10 நாட்களாகிவிட்டன. ஏற்கனவே, 3 நாட்களில் […]
கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்த பாதிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில், 1,99,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,320 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி […]
ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது கூட்டுறவு துறை சார்பில் அனைத்து மண்டல பதிவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற […]