கருப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கருப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்ற்னர். இவர்களது போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ உலகப் பேரிடரான கொரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் […]
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு […]
கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழக […]
சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு பயிற்சி மையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட, அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான […]
தொழில் நிறுவனத்திற்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பு. இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும். மேலும், இந்த சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியை, சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, சன் ஃபார்மா […]
கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இந்நிலையில் இன்று மாலை முதல் திங்கட்கிழமை வரையில் எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கோவையில் நேற்று புதிதாக 189 தொற்றுகள் பதிவான […]
ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், அதை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில், முகக்கவசம் […]
கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். […]
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 3.57 லட்சமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,57,117 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 278 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,132 […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் காலவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பரவல் தடுப்பு […]
கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5-ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படும் என […]
போலி இ-மெயில் விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி பெரியாரியச் சித்தாந்த அமைப்புகளால் இயக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டு, இது தொடர்பான குற்றச்சாட்டை மக்களும் சேர்ந்து அந்த தனியார் தொலைக்காட்சி குழுமத்தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று மாரிதாஸ் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு தனியார் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி பதிலளித்திருக்கிறார் என்று மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த மின்னஞ்சல் பொய்யானது என்று வினய் சாரவாகி தனது […]
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
இன்று தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,99,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,43,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேர் பாதிக்கப்பட்டனர். […]
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத வகையில் கொரோனாவிலிருந்து 6,504 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து இதுவரை இல்லாத வகையில் 6,504 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 1,43,297-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா இதுவரை 92,206 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சென்னையில், இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 76,494 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,743 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள […]
பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை. இதனையடுத்து, அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தனது நண்பர் ரவி […]
பாதுகாப்பு கலந்த சுகாதாரத்துக்காக டெட்டோல் நிறுவனத்துடன் சென்னை பி.வி.ஆர் திரையரங்கம் இணைந்துள்ளது. சென்னையின் பிரபலமான திரையரங்காகிய பிவிஆர், சினிமா திரை உலகில் உள்ள விருந்தினர்களுக்கு மேம்பட்ட சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு நெறிமுறைகளை நாடு முழுவதிலும் 70 நகரங்கள் மற்றும் 175 இடங்களில் செயல்படுத்துவோம் என அண்மையில் உறுதி எடுத்துக்கொண்டது. இந்நிலையில் சுகாதாரத்திற்காக தற்பொழுது இவர்கள் டெட்டால் கிருமிநாசினி நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும் சுகாதாரமான அணுகுமுறையும் கொண்டுள்ளதால், […]
பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்கும்போது, பரோலில் விடுதலையில் செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும் காவல்துறையினர் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு நீதிபதி, கைதிகளிடம் பரோலில் பணம் வாங்கினால் அதுவும் லஞ்சம் தான் என கூறினர். இதுபோன்ற […]