24-ம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி வரும் 24ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம், பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், ஆன்லைன் வசதியுடன் தனி அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் […]
தமிழக அரசு ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, பல புதிய நிறுவனங்களுடன், தொழில்துறைகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிற நிலையில், ரூ.5,137 கோடி முதலீட்டில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொளி மூலமாகவும் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதத்தில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]
தமிழக ஆளுநர் மாளிகையில் இதுவரை 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணிநேரத்தில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பரவும் கொரோனா, ஆளுநர் அலுவலகத்தையும் விடவில்லை. தமிழக ஆளுநர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை […]
“கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது “டுவிட்டர்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, […]
தூத்துக்குடியில் மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை. தூத்துக்குடி மாவட்டம் கே.டி.சி நரை சேர்ந்தவர் பிரேம் குமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி அக்கா கணவர் விக்னேஸ்வரன் .இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் பிரேம்குமாருக்கும் விக்னேஸ்வரனின் மனைவியும் இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனைவியின் அக்காவை வீட்டிற்கு […]
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் […]
சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். […]
கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து […]
தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தற்போது அதிகம் பேசப்படும் பேச்சு கொரோனா தான்.அந்த அளவிற்கு கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு உள்ளது.உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.எனவே கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் […]
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி. சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு முதுகு பின்தண்டுவடத்தில் வலி இருப்பதாகவும், […]
நாமக்கல்லில் முட்டை விலை 3.75 காசுகளாக விற்பனையாகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை […]
பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார் .தமிழகத்தில் இது வரை 4 அமைச்சர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் […]
ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக அன்றாடம் வழிபாடுகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, […]
மீண்டும் திமுகவில் இணைந்த எஸ்.கே.வேதரத்தினம் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் 1996, 2001 மற்றும் 2006 ஆகிய மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.கே.ராஜரத்தினம். திமுகவில் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து 4-வது முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2016 -ஆம் நடைபெற்ற […]
சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான இ பாஸ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் வந்த, 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, அதிலும் தமிழகத்திலுள்ள சென்னை மாநகரத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் முன்னதாகவே இ பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த பின்பு அனுமதி வந்தால் தான் […]
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான […]
சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விடுவது, போன்றவற்றுக்கு செப்டம்பர் […]
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறத. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த பிளாஸ்மா வங்கி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது. […]
தமிழகத்தில் விடுபட்ட உயிரிழப்பான 444-யும் சேர்த்து கொரோனாவால் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் […]