கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஆற்றங்கரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மோகன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஆனைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் 38 வயதான இவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார் மேலும் இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவியை பிரிந்து விட்டார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றங்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மோகன் கால்கள் கட்டப்பட்டு ஆடை இல்லாமல் தலையில் ரத்ததுடன் இறந்துகிடந்தார், மேலும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதள பக்கங்களாகிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் போலி முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து வந்துள்ளனர் சிலர். அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தற்போதும் மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலியை சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் […]
பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல். ராமநாதபுரம் அருகே, சமுகம் வலைத்தளம் மூலம் பெண்கள் ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின நிலையில், சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரித்ததில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறித்து வந்ததும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போலி முகவரிகளை காட்டி, மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் […]
மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மதுரையில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3423 ஆக உள்ளது.மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 24 தேதி முதல் 5-ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூலை 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் […]
தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழக முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நள்ளிரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது நோயாளிகளை ஏற்றி வரும் […]
இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவப்படம் திறப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் சில அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 10-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, அரியலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் […]
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனிமைப் படுத்துதல் முகாமில் அம்மா அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை,கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு டாஸ்மார்க் குடோனில் பணியாற்றும் 500 கூலி தொழிலாளிகளுக்கு காய்கறி மற்றும் அரிசி தொகுப்பை அவர் வழங்கியுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை உறுதி என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கை மீறி வந்தவா்களிடம் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது […]
எனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையில் ,சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் ரீதியாக முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. […]
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியையும் (ரூ. 2, 145 கோடி) , தமிழக […]
சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் ,பொதுமக்கள்,உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் […]
அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்தது நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்பொழுது சென்னையில் 23,581 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் […]
நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 3.70 காசாகவே நீடிக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல் […]
கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் […]
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்கிற முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் ஊழியர் தனது பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற காரணத்தால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை எனக் கூறி பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் வசதிக்கேற்ப பேட்டரி கார் வசதி இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான பேட்டரி கார் வசதி பயன்படுத்த உள்ளது. இன்று முதல் இந்த பயன்பாட்டுக்கு வரும் பேட்டரி கார் வசதி அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகப்படுத்தவுள்ளார். ஏற்கனவே உள்ள 4 பேட்டரி கார் வசதி பொது நோயாலி பிரிவுகளுக்கு நிலையில் நோய்களில் பயன்பாட்டில் உள்ள நிலையில் […]
மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை […]